ஸ்வீட்டில் போதை பொருள் கலந்து பள்ளி மாணவி பலாத்காரம்! சென்னை அதிர்ச்சி சம்பவம்.. சிக்கிய போதை கேங்!

சென்னை அண்ணா நகரில் பிரபல காபி ஷாப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காபி ஷாப்புக்கு பள்ளி மாணவி ஒருவர் நண்பர்களுடன் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

School girl raped with drugs mixed with sweet in Chennai

பிறந்த நாள் பார்ட்டி என்று பள்ளி மாணவிக்கு ஸ்வீட்டில் போதை பொருளை கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை அண்ணா நகரில் பிரபல காபி ஷாப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காபி ஷாப்புக்கு பள்ளி மாணவி ஒருவர் நண்பர்களுடன் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், தோழிக்கு பிறந்த நாள் என கூறியதை அடுத்து அதை நம்பி பள்ளி மாணவி சென்றுள்ளார். அப்போது அவரை பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவியுடன் நட்பாக பழகி பிறந்த நாள் பார்ட்டி தருவதாக அழைத்துச்சென்று ஓயோ சில்வர் கீ தங்கும் விடுதியில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சினிமா ஆடை வடிவமைப்பாளர் அகிரா, சோமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு மது கொடுத்து மயங்க வைத்ததாக கூறினர். ஆனால், பள்ளி மாணவியோ ஸ்வீட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறினார். பின்னர் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருளை ஸ்வீட்டில் கலந்து மாணவிக்கு கொடுத்தது தெரியவந்தது. மாணவி போதை மயக்கத்தில் இருப்பதை பயன்படுத்தி கூட்டாளி சோமேஸுடன் சேர்ந்து வில்லியம்சும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய போதை பொருள் விற்பனையாளர் விக்னேஷ் என்கிற வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டார். இவர் போதை வஸ்துக்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதையும் படிங்க:  கொலை வெறியில் அண்ணனை தேடி வந்த கும்பல்! சிக்கிய தம்பியை சின்னா பின்னமாக்கிய கொடூரம்.. சென்னையில் பயங்கரம்!

வில்லியம்ஸுடன் தங்கி இருந்த விழுப்புரத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ், சைதாப்பேட்டை அஜய் ஆகியோரிடம் இருந்து 2 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் போதை பொருளை கைப்பற்றியதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் மீது போக்சோ மற்றும் போதை பொருள் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios