தென்காசி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையை அடுத்த தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித் (19). கூலி தொழிலாளி. இவர் 16 வயதான பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் சந்தித்து பேசி வந்துள்ளனர். 

இந்நிலையில், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.