9ம் வகுப்பு மாணவியை 6 மாதம் கர்ப்பமாக்கிய மாணவன்.. வீடு புகுந்து போக்சோவில் தூக்கிய போலீஸ்..!
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மகளிடம் கேட்ட போது நடந்த சம்பவத்தை கதறிய படி தாயிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக எம்.கே.பி. நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் ஒருவரை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.