சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2018ம் ஆண்டு ஆத்தூர் அருகேயுள்ள சுந்தரபுரம் பகுதியில் பூ கட்டுவதற்காக நூல்வாங்க சென்ற சிறுமியிடம் தினேஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்ல சிறுமி சென்றபோது சிறுமியை பிடித்து கழுத்தை அறுத்து தலையை துண்டித்து தினேஷ்குமார் கொடூரமாக கொலை செய்தார்.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்து அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலியல் சீண்டல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2018ம் ஆண்டு ஆத்தூர் அருகேயுள்ள சுந்தரபுரம் பகுதியில் பூ கட்டுவதற்காக நூல்வாங்க சென்ற சிறுமியிடம் தினேஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்ல சிறுமி சென்றபோது சிறுமியை பிடித்து கழுத்தை அறுத்து தலையை துண்டித்து தினேஷ்குமார் கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலை துண்டித்து கொலை
இதனையடுத்து தினேஷ்குமார் மீது ஆத்தூர் காவல்நிலையத்தில் கொலை, பாலியல் சீண்டல் மற்றும் தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் மீது போக்சோ, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தினேஷ்குமார் குற்றவாளி என்பது 100% உறுதியானதையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீண்டாமை தடுப்புச்சட்டத்தின்கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
