பெண்கள், சிறுமிகள், குடும்பப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. அதிலும் கூட்டாக பெண்களை கற்பழித்து வீடியோ எடுத்தும் நடத்தும் பாலியல் வக்கிரங்கள் தொடர்கிறது.

பள்ளிக்கு நடந்து சென்றபள்ளி மாணவியை லிப்ட் கொடுப்பதாக சொல்லி காரில் ஏற்றி சென்ற குமபல் கூட்டாக கற்பழித்துவிட்டு சாலையோரம் வீசிச் சென்ற கொடுமையான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்குரலி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் 3 பேர் கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை லிப்ட் கொடுப்பதாக கூறி காரில் ஏற்றி மானபங்கப்படுத்தி உள்ளனர். பின்னர் மாணவியை சாலையோரம் வீசிச் சென்றனர். 

அந்த வழியாக நடந்து செண்டை ஊர் மக்கள் மாணவி சாலையில் கிடப்பதை பார்த்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான அந்த கும்பலை  வலைவீசித் தேடி வருகின்றனர்.