கோவையில் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த செய்த பள்ளி மாணவர்கள் 4 போ் உள்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது  செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் அதே  பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்  சிறுமி கர்ப்பமாக  இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே கோவை  கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கொரோனா பீதியால்  மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து  யாருக்கும் தகவல் தெரிவிக்காமல்  மாலையில் தப்பி சென்று விட்டார்.

இதையும் படிங்க;- எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!
 

இதனையடுத்து, அந்த பள்ளி மாணவி வீட்டுக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியுடன் பள்ளியில் படித்த மாணவர் தன்னை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்தார். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும், அக்கம் பக்கத்தினரும் பள்ளி மாணவியை மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா

இதனால்  கர்ப்பமாகி விட்டேன். அச்சம் காரணமாக பெற்றோர்களிடம் தெரிவிக்காமல்  மறைத்து விட்டேன். அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதைத்தொடர்ந்து என்  தாயுடன் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோதுதான்  கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்  எனக் கூறியுள்ளார். இது  தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம்  செய்ததாக கார்த்திக் (23),  தனசேகர் (24), சிங்காநல்லூரை சேர்ந்த சந்தோஷ் (19) மற்றும் பிளஸ்1 மற்றும்  பிளஸ் 2 படிக்கும் 4 பேர் உள்ளிட்ட 8 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள்  கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர்.