மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமையை என்னவென்று கூட சொல்லத் முடியாமல் விவரித்த சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்த புலிவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான 15 வயது மதிக்கத்தக்கவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சற்றே மனநிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவில்லை. இதற்கிடையே சிறுமியின் தந்தையும் இறந்து விட்டதால் விவசாய கூலித்தொழில் செய்து சிறுமியின் தாய் பிழைப்பு நடத்தி வந்தார். தான் வேலைக்கு செல்லும் போது மனநிலை பாதித்த மகளை அவரது தாத்தாவின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ளார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் பெண்ணின் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது மனநிலை பாதித்த 15 வயது சிறுமி அவர்களின் கண்ணில் பட்டுள்ளார். அவரிடம் நெருங்கிச் சென்ற காம வெறி பிடித்த 4 பேரும் முதலில் லேசான பாலியல் சில்மி‌ஷங்களில் ஈடுபட்டுள்ளனர். தன்னை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட உணர முடியாத மனநிலையில் இருந்த அந்த சிறுமியும் பேசாமல் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 4 பேரும் நாளடைவில் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

அவர்களின் காமப்பசிக்கு இரையான சிறுமிக்கு தொடர்ந்து நடவடிக்கையிலும்,  உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பெற்ற மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த தாய் விசாரித்த போது, முதலில் என்னவென்று கூட சொல்லத் முடியாமல் வெகுளித்தனத்தை கைகளால் அவர்களை காட்டியுள்ளார். பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து தன்னை இப்படி... செய்தார்கள், அப்படி செய்தார்கள் என பெற்ற தாயிடம் அந்த சிறுமி சைகை மூலம் கூறியுள்ளார்.

அதிர்ந்து, கலங்கிப்போன போன அந்த தாய், மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தையை இப்படி காம வெறி பிடித்த மிருகங்கள் சீரழித்துள்ளதை நினைத்து குமுறி அழுத தாய், இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் முதற்கட்ட விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் சிறுமி பலவந்தமாக சீரழித்ததாய் உறுதி செய்த பின் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டீக்கடைக்காரர் டி.செல்வராஜ், பால்காரர் முத்து, பெட்ரோல் பங்க் ஊழியர் ராமராஜ்  மற்றும் பெரமங்கலம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பி.செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார்.

கடந்த மாதம் 28-ந்தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் கொடுத்த அடுத்த 3 நாட்களில் அதிரடி விசாரணை நடத்திய ஜீயபுரம் போலீசார் காமுகர்கள் 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில், அந்த பெண் 4 மாச கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர் கர்ப்பமாகி 20 வாரங்களை கடந்து விட்டதால் கருக்கலைப்பு சாத்தியமாகுமா? என்று டாக்டர்கள் குழு ஆலோசித்து வருகிறார்கள்.