கோவையில், 11ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். 

கோவையில் கடந்த 26-ம் தேதி 11ம் வகுப்பு மாணவி ஒருவர் அங்குள்ள பூங்காவில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பர் வந்தனர். அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பூங்காவின் அருகே மறைவான இடத்தில் வைத்து தாக்கினர். காதலன் கண்முன்னே மிரட்டி, ஆடைகளை அகற்றி, வீடியோ பதிவு செய்து செய்துள்ளனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர். 

ஆனால், காமவெறி பிடித்த வாலிபர்களோ காதலன் கண்முன்னே மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பயந்துபோன அந்த மாணவி இரவில் காதலன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் மாலை வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக அனைத்து மகளிர் மேற்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 6 பேர் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.  முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட இருவரை தேடி வருகின்றனர். மாணவியின் பிறந்தநாளன்று நடந்த இந்த கொடூர சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.