Asianet News TamilAsianet News Tamil

ஏடிஎம் இயந்திரங்களில் நூதன கொள்ளை... ஹரியானாவில் சிக்கிய கொள்ளையன் சென்னை கொண்டு வரப்பட்டார்...!

ஹரியானா விரைந்த தனிப்படை போலீசார், மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர ராவத் என்பரை டெல்லி போலீசாரின் உதவியுடன் கைது செய்தனர்.

SBI ATM Deposit Machines robbery arrested person arrived to chennai
Author
Chennai, First Published Jun 27, 2021, 6:42 PM IST


சென்னையில் வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட வங்கி கிளைகளிலும் வடமாநில கொள்ளையர்கள் ரூ.48 லட்சம் வரை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூதன கொலையானது கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்பட்டது.  இது குறித்து அடுத்தடுத்த வந்த புகாரால் சுதாரித்துக் கொண்ட போலீசார், கொள்ளையர்கள் சென்னையை விட்டு தப்பியிருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். 

SBI ATM Deposit Machines robbery arrested person arrived to chennai

3 நாட்கள் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் கொள்ளையர்கள் வட மாநிலத்தவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த கொள்ளை கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடிக்கைக்கு எடுத்த இவர்கள் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

SBI ATM Deposit Machines robbery arrested person arrived to chennai

இதையடுத்து ஹரியானா விரைந்த தனிப்படை போலீசார், மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர ராவத் என்பரை டெல்லி போலீசாரின் உதவியுடன் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வீரேந்திர ராவத் இன்று மாலை விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios