Asianet News TamilAsianet News Tamil

ஐயோ..என் அம்மாவையும், என் தம்பியையும் காப்பாற்றுங்கள்.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய நடிகர்..

கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Save my mother and brother .. The actor who Screaming into the police commissioner's office ..
Author
Chennai, First Published Jul 20, 2021, 8:23 AM IST

கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். சுறா , அயன் உள்ளிட்ட பல  திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மீசை ராஜேந்திரநாத். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில்,  

Save my mother and brother .. The actor who Screaming into the police commissioner's office ..

சென்னை சூளைமேடு பகுதியில் தான் வசித்து வருகிறேன் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் முக்கூடல் பகுதியயை சேர்ந்த ராஜா, கிரிதரன்,பசுபதி, முத்துசாமி, மணி ஆகிய  நபர்கள் கோவில் பெயரை பயன்படுத்தி பல கோடி மோசடி செய்வது  மட்டுமின்றி உண்டியல்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்து, மோசடி செய்வது,  ஐம்பொன் சிலை திருட்டு, மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பது. போன்ற தவறான செயல்களை பல வருடங்களாக செய்து வருகிறார்கள். 

இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது  ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை போட்டு  தடை ஆணையை பெற்றுள்ளேன். இதனால்  இது போன்ற செயலில் ஈடுபடுவதால் சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாமல், திருநெல்வேலியில் உள்ள தாய் மற்றும் தம்பியை கொலை செய்ய போவதாகவும் தொடர்ச்சியாக தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

Save my mother and brother .. The actor who Screaming into the police commissioner's office ..

ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவல்லிகேணி  துணை ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios