இப்படி ஒரு நாள் கூட ஜெயிலுக்குப் போகாம செத்துப் போயிட்டாரே !! வேதனையில் துடித்த ஜீவஜோதி !!

சரவணபவன் ராஜகோபால் ஒருநாள் கூட சிறைக்கு செல்லாததை ஏற்க முடியாது என்றும் என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது என்றும் அவரால் பாதிக்கப்பட்ட  ஜீவஜோதி வேதனையுன் தெரிவித்தார்.
 

saravana bhavan rajagopal  and jeevajothi

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், ஜெயிலில் அடைப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

saravana bhavan rajagopal  and jeevajothi

இந்நிலையில் ராஜகோபாலால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எனது கணவர் கொலை வழக்கில் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உயிரிழந்ததை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

saravana bhavan rajagopal  and jeevajothi

நான் உயிருக்கு உயிராக பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்து சந்தோசமாக வாழ்க்கை தொடங்கினேன். ஆனால் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் என்னை மூன்றாவது திருமணம் செய்ய எனக்கு பல வகையில் தொந்தரவு செய்தார். 

saravana bhavan rajagopal  and jeevajothi

ஆனால் அதையும் மீறி நான் எனது கணவருடன் வாழ்ந்து வந்தேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராஜகோபால் தனது அடியாட்களை வைத்து எனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி மலை அடிவாரத்தில் கொடூரமாக கொலை செய்தார். சின்ன வயதில் எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது என வேதனை தெரிவித்தார்.
 
பல எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தாண்டி நீதிமன்றம் மூலம் ராஜகோபால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் எனது நியாயமான போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றமும் ராஜகோபால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. 

saravana bhavan rajagopal  and jeevajothi

அந்த நாள் என் வாழ்நாளில் எனக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்தது.எனது கணவரின் கொலை வழக்கில் குற்றவாளி என உறுதியாகி ஆயுள் தண்டனை பெற்ற பிறகு ராஜகோபால், தனது உடல் நிலையை காரணம் காட்டி ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

saravana bhavan rajagopal  and jeevajothi

அவர் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தம் அளித்தாலும், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது. எனக்கும் இந்த நிகழ்வு ஆறாத வடுவாக உள்ளது என ஜீவஜோதி தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios