சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21 ஆம் தேதி ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்தைத்ப் பார்த்த மாகராட்சி ஊழியர்கள் இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில்  துண்டு துண்டாக உடல் பாகங்கள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பதும் அவர்  திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் மனைவி என்பதும், இவர்கள் இருவரும் ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்தார்கள் என்பதும் தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை  நடத்தியதில் சந்தியாவைக் கொன்றதை ஒப்புக் கொண்டார். மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை வெட்டி கொன்றதாகவும், உடல் பாகங்களை குப்பையில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
 
இதைத் தொடர்ந்து சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள கூவம் ஆற்றில் சந்தியாவின் இடுப்பு, மற்றும் தொடைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்  பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சந்தியாவின் தாய்  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த போது 16 வயது தான்.. பெரியோர்கள் பார்த்துதான் திருமணம் வைத்தனர்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தூத்துக்குடியில் எங்கள் வீட்டுக்கு வந்த சந்தியா எங்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டதாக கூறினார். 

இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் என்னுடன் சந்தியா பேசவில்லை. இதனால் எனது மாப்பிள்ளை பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டபோது சந்தியா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறினார், ஆனால் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த கை, கால்களைப்  பார்த்ததுமே தனக்கு சந்தேகம் வந்ததாக கூறினார்.


என் மகள் அழகாக தெரியக்கூடாது என்பதற்காக சந்தியாவுக்கு பல முறை  பாலகிருஷ்ணன் மொட்டை அடித்துள்ளார் என்றும், பாலகிருஷ்ணனுக்கு  எப்போதுமே . என் மகள் மீது சந்தேகம்தான் என சந்தியாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.