சந்தியா கொலை வழக்கில், அவரின் கணவருமான இயக்குநர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட பாலகிருஷ்ணன் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அப்போது தன்னை விட 18 வயது இளையவரான 16 வயது சந்தியாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 2006 உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதிவிக்கு மனைவியை சுயேட்சையாக களமிறக்கி இருக்கிறார் பாலகிருஷ்ணன். அப்போது தனக்கு வாக்களித்தால் எப்போது வேண்டுமானலும் தன்னை சந்திக்கலாம் எனக்கூறி தனது செல்போன் நம்பர் அடங்கிய விசிட்டிங் கார்டுகளை பல இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். அதன் மூலம் அப்போதே பல இளைஞர்களிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார் சந்தியா. தேர்தலில் தோற்றாலும் அந்த இளைஞர்களுடனான நட்பும், உல்லாசமும் தொடர்ந்துள்ளது. அந்த இளைஞர்கள் பலரும் பாலகிருஷ்ணன் இல்லாதபோது வீட்டிற்கே வந்து சந்தியாவுடன் நெருங்கி பழகி சென்றுள்ளனர். 

இதனை அறிந்து மனம் நொந்த பாலகிருஷ்ணன், சந்தியாவை பார்க்க வீட்டிற்கு வரும் நபர்களை அறிய வீட்டிற்கு முன் கண்காணிப்பு கேமராவை பொருத்தி உளவு பார்த்துள்ளார். அந்த கண்காணிப்பு கேமராவை அகற்றக்கோரி வீட்டு வாசல் முன் தான் உடுத்தி இருந்த ஆடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தியுள்ளார் சந்தியா. காவல்துறையினர் தலையிட்டு சந்தியாவை சமாதானப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே அவ்வப்போது சென்னை வந்து செல்லும் பாலகிருஷ்ணன் தனது மனைவி பெயரில் 2015ல் சந்தியா கிரியேசன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி ’காதல் இலவசம்’ என்கிற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். 

அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் பிற இயக்குநர்களின் படங்களில் உதவி இயக்குநராகவும் பணி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தியாவின் நடத்தை குறித்து வந்த தகவல்களால் மனம் வெறுத்துப்போன பாலகிருஷ்ணன் கோவிலுக்கு மொட்டை அடிக்க வேண்டிக் கொண்டிருந்ததாகக் கூறி 8 முறைக்கும் மேல் சந்தியாவிற்கு மொட்டை அடித்துள்ளார்.

சினிமாவில் பணத்தை இழந்ததால் பாலகிருஷ்ணனுக்கும், சந்தியாவும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஆண் நண்பர் ஒருவருடன் சந்தியா தலைமறைவாகி உள்ளார். தூத்துக்குடி, தென்பாகம் காவல்நிலையத்தில் இருவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடந்தபோது இருவரும் நீதிமன்றத்தை நாடிவிவாகரத்து பெற்றுக் கொள்ளப்போவதாக கூறி மகன் பெங்களூருவில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். மகளை தனது கணவர் வீட்டில் விட்டு விட்டு ஞானம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி வந்துள்ளார். 

மீண்டும் தனது கணவரைப் பார்க்க செல்வதாக கூறி 75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சந்தியா சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த அவர் கணவரை பார்க்காமல் வெளியில் தங்கி டிவி சீரியல்கள், திரைப்பட தயாரிப்பு நிறுவங்களுக்கு சென்று சான்ஸ் வேட்டை தேடியுள்ளார். அப்போது பல ஆண் நண்பர்களின் நட்பு கிடைத்துத்துள்ளது. அதன் மூலம் தவறான சகவாசம் அதிகரித்துள்ளது.  இதனால், சென்னையிலும் பல ஆண்களுடன் சகவாசம் ஏற்பட்டுள்ளது. இதனை கேட்டு கொதித்துப்போன பாலகிருஷ்ணன் தானே நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாக கூறி சந்தியாவை கடந்த மாதம் 15ம் தேதி வீட்டிற்கு வரவழைத்துளார். ஆனால், சொன்னபடி சினிமா வாய்பு  பற்றி வாய்திறக்காததால் கோபமான சந்தியா கடந்த 17ம் தேதி பாலகிருஷ்ணனுடன் தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து தற்கொலைக்கு முயன்ற சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பாலகிருஷ்ணன் காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து சந்தியா 19ம் தேதி வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது ஆத்திரம் அடைந்த்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் ஓங்கி தாகியுள்ளார். இதில் சுருண்டு விழுந்து அப்போதே உயிரிழந்துள்ளார். பின்னர் 20ம் தேதி  கூர்மையான ஆயுதங்களை கொண்டு கை, கால், தலையை கண்டந்துண்டங்களாக வெட்டி குப்பையில் வீசியதாக பாலகிருஷ்ணன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.