மருத்துவப் பரிசோதனைக்கு வந்த  ஒரே கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவிகளில் 3 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் வீட்டுக்கு அருகில் உள்ள வாலிபர்களுடன் நெருங்கி பழகி வந்தநிலையில் கர்ப்பமானதாக அவர்கள்  விசாரணையில்  தெரிவித்துள்ளனர் .  நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும்  கல்லூரிக்கு தங்கள் பெண்களை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கல்லூரிக்கு அனுப்பும்   பெற்றோர்கள் அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வரும்வரை பதற்றத்துடனும் அச்சத்துடனும் காத்திருக்கும் நிலைதான்  உள்ளது .  ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும் சில நேரங்களில்  தவறான வழிகளில் ஈடுபட்டு வாழ்க்கையையே தொலைக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். 

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே  காதல் ,  கல்லூரி படிக்கும் போது கையில் குழந்தை என பெண்கள் சீரழியும் ஆவலங்களும் அதிகரித்துள்ளன.  அந்த வகையில்  ஹைதராபாத்  ஆசிபாபாத் மாவட்டத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள்  கர்ப்பமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சில தினங்களுக்கு முன்னர்  கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தொண்டு நிறுவனமொன்றின்  சார்பில்  இலவசமருத்துவ முகாம் நடைபெற்றது.  அப்போது  ஒரு வகுப்பறையில் இருந்த பத்து மாணவிகளை மருத்துவர்கள்  பரிசோதித்ததனர் அதில்  மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, இது மருத்துவ பரிசோதனையில்  ஈடுபட்டிருந்த  மருத்துவர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது .   உடனே இது குறித்து  அம்மாணவிகள் மற்றும் அவர்களது  ஆசிரியர்களிடத்திலும்  மருத்துவர்கள் ரகசியமாக தெரிவித்தனர் .

 

பின்னர் கல்லூரி ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களுக்கு கொடுத்த தகவலையடுத்து அதிர்ச்சியடைந்த  பெற்றோர்கள்  நாங்கள் மகள்கள்  கர்ப்பமாக இருப்பது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் .  அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் , மாணவிகள் கூறியதை கேட்டு போலீசார் ஒருகணம் திக்குமுக்காடினர்,  ஆதாவது,   தங்கள் வீட்டுப் பக்கத்தில்  உள்ள வாலிபருடன் நெருங்கி பழகியதால்  இந்த நிலைக்கு ஆளானதாக  மூன்று மாணவிகளும் ஒரே தொனியில்  தெரிவித்ததுதான் அது,   தனக்கு  அதில் விருப்பமில்லை என்றாலும் தன்னை  வலுக்கட்டாயப்படுத்தி அந்த வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவிகள் தனித்தனியாக கூறினர் . அதை கேட்டு போலீசார் மாணவிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அவர்களின் கர்பத்துக்கு  காரணமான வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் .