Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் மாவட்டத்தில் பயங்கரம்... பட்டப்பகலில் சிறை வார்டன் ஓட ஓட விரட்டி படுகொலை..!

சேலத்தில் பட்டப்பகலில் சிறை வார்டனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

Salem Prison Warden murder
Author
Tamil Nadu, First Published Jul 12, 2019, 11:10 AM IST

சேலத்தில் பட்டப்பகலில் சிறை வார்டனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

சேலம் சோளம்பள்ளம் பக்கமுள்ள அய்யம்பெருமாம்பட்டி புதுரோட்டை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் மாதேஷ்(28). இவருக்கு வினோதினி (22) என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றிய மாதேஷ், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்தார். இந்நிலையில் சூரமங்கலத்தை சேர்ந்த செல்வம் என்பவரது விலை உயர்ந்த கார்  உள்பட  2 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

  Salem Prison Warden murder

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாதேசை கைது செய்தனர். பின்னர், கடந்த ஜனவரி 19-ம் தேதி வார்டன் மாதேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறை நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில்இ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். 

இதனையடுத்து, தனது நண்பருடன் ஆண்டிப்பட்டியில் மீன் பண்ணை நடத்தி வந்தார். நேற்று பகல் 2 மணி அளவில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் வரை வழிமறித்தது. இவர்களிடம் தப்பிக்க தலைதெறிக்க மாதேஷ் ஓடினார். ஆனால், விடால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மாதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Salem Prison Warden murder

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios