சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான கோபியின் மகன் சுரேஷ், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தன் தந்தையுடன் சேர்ந்து தொழிலையும் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ், இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சேலம் மாநகரப் பகுதியில், கோபிக்குச் சொந்தமான வாகனக் கொட்டகை முன்பு இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக நின்றிருந்துள்ளது. இரவு சுமார் 11 மணி ஆகியும், அந்த வாகனம் அங்கே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொட்டகையைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்பொழுது அந்த வாகனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ந்து போன அந்த பகுதி மக்கள், இது தொடர்பாக சுரேஷின் பெற்றோருக்கும், போலீசாருக்கும்  தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் , வாகனத்தில் சடலமாகக் கிடந்த சுரேஷின் சடலத்துடன், அப்பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:- வேட்டி விளம்பரத்தில் பிரதமர் மோடி... தமிழ்நாட்டின் அடையாளமாக மாறி அசத்தல்..!

முதற்கட்ட விசாரணையில் சுரேஷுடன் பிணமாகக் கிடந்த பெண், சேலம் பகுதியைச் சேர்ந்த, வியாபாரி ஒருவரின் மகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுரேஷும் - ஜோதிகாவும் காதலித்து வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் இருவரும் கடைசி நேரத்தில் உல்லாசமாக இருந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வாகனத்தில் உல்லாசமாக இருந்த சமயத்தில், மூச்சடைத்து உயிரிழந்தார்களா? ஆகிய கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சேலத்தில் நள்ளிரவில் இளம் ஜோடி சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, போலீசார் விசாரணையில் சுரேஷ், ஜோதிகா 2 பேரும் கார் நிறுத்தும் இடத்தில் சந்தித்து சாக்லெட்டில் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதை கண்டறிய காதல் ஜோடியின் உடற்கூறுகள் சிலவற்றை ஆய்வுக்காக மரவனேரியில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். 

இதையும் படியுங்கள்:- அடம்பிடித்து அசால்ட் காட்டிய மோடி... கண்கள் பனித்து, இதயம் இனித்த ஷி ஜின்பிங்..!

இந்த ஆய்வு முடிவுகள் விரைவில் கிடைத்து விடும். அதன்பிறகு அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற விவரம் தெரியவரும். மேலும் சுரேஷ், ஜோதிகா தற்கொலை செய்வதற்கு முன்பு யார், யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பதை அறிய கோர்ட்டு மூலம் அவர்களுடைய செல்போன்களின் சிம் கார்டை ஆய்வு செய்ய உள்ளோம் முழு விசாரணைக்கு பின் பல தகவல்கள் கிடைக்கும் எனது தெரிகிறது.