சேலத்தில் நடுரோட்டில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  ராமஜெயம். இவரது மகன் உதயசங்கர்(30). இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணிச் செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Salem bjp leader murder... police investigation

சேலத்தில் பொதுமக்கள் மத்தியில் பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  ராமஜெயம். இவரது மகன் உதயசங்கர்(30). இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணிச் செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியிலுள்ள ஒரு கடை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் உதயசங்கரிடம் பேச்சு கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதை அடுத்து அந்த கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எடுத்து உதயசங்கரை வெட்ட முயன்றனர். இதனை கண்ட அவர் உயிர் பயத்தில் ஓட தொடங்கினார். 

Salem bjp leader murder... police investigation

ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த உதயசங்கரை அப்பகுததி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Salem bjp leader murder... police investigation

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவசி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios