சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை வழக்கு! திடீர் திருப்பம்! தங்கையை அக்காவை போட்டு தள்ளியது அம்பலம்.!
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ரயில் நிலையத்தில் கடந்த 19ம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை தங்கை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை 4 பேர் கொண்ட வெட்டிவிட்டு அதே ரயிலில் தப்பித்தனர். இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல் மற்றும் ஜான்சன் ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.