கடவுளே இல்லைனு சொல்லி பேசி ஊரை ஏமாத்திட்டு இவங்க கோயிலுக்கு போவாங்களாமா இதற்கு பேர் தான் பகுத்தறிவா? ஏன் போகனும் நாய் மாதிரி தலைதெறிக்க ஓடனும்? சபரிமலையில் அமைதியை கெடுக்க போகும் இவர்களை போன்ற கூட்டத்திற்கு இன்று சரியான பாடம், தன் சுய விளம்பரத்திற்காக சபரிமலை செல்லலாமா?

நேற்று சபரிமலை சென்ற தமிழகத்தை சேர்ந்த மனிதி அமைப்புக்கும் நக்சலைட் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தவிர இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தீவிரவாத பயிற்சி அளித்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த குற்றவாளி என எத்தனைப் பெருக்குத் தெரியும்? சபரிமலை புனிதத்தை கெடுப்பதற்க்காக முயற்சிசெய்து வருவதாகவே தெரிகிறது.

ஆமாம், சபரிமலை போன இளம்பெண்களை ஓட ஓட விரட்டும் வீடியோ பார்த்தால் தெரியும். ஓடுவது உண்மையாகவே சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வந்ததாகவே, இந்துப் பெண்கள் மாதிரி இருக்கேன்னு யோசிக்க வேண்டாம். போலீசார் துரத்தும்போது ஓடும்போது, ஒரு பெண் "தோழர், செல்வி தோழர் எங்க" ன்னு இன்னொரு பெண்ணிடம் கேட்கும். தெளிவா கேளுங்க... இதுதான் அவங்க ஐயப்ப பக்தியா?

அக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரெஹானா ஃபாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சபரிமலையின் பிரதான சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. முன்னதாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அக்டோபர் மாதத்தில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த வழியில், ரெஹானா ஃபாத்திமா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில் அவர் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் மற்றும் அவரது தொடை தெரியுமாறு அந்த புகைப்படம் இருந்தது. 

நம் நாட்டை விட வேறெங்கும் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றே சொல்லலாம், சபரிமலை விவகாரத்தில் நம் முன்னோர்கள் அனைத்தையும் தெரிந்தே சில விதிகளை வழிமுறைகளை கூறி விட்டுசென்றுள்ளனர். பெண் உரிமை என்ற பெயரில் அதை மாற்ற முயலும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!