ரூ.40 கோடி மோசடி! வங்கி கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது! அதில் என் கணக்கும் ஒன்னு! Ex IAF அதிகாரி பகீர்!
தெலங்கானா இண்டஸ்இண்ட் வங்கியில் ரூ.40கோடி ரூபாய் பணம் பல வங்கி கணக்குகளுடன், தன் வங்கிக்ககணக்கும் தவறாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் IAF அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இண்டஸ்இண்ட் வங்கி கடந்த ஜூலை 19ம் தேதி அன்று தாக்கல் செய்த முதல் புகாரின்படி, ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (ABHFL) மும்பை கணக்கில் ரூ. 40 கோடியை மோசடி செய்ததாக வங்கி அதிகாரிகள் ராமசாமி மற்றும் ராஜேஷ் மற்றும் ரெட்டி மீது சைபராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில், ரெட்டியின் கணக்கில் பணம் திருப்பிவிடப்பட்டது. அங்கிருந்து நாடு முழுவதும் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பஷீத் என்ற நான்காவது நபரின் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த போலீசார், அவரை ராஜேஷ் மற்றும் ராமசாமி உதவியுடன் கடந்த ஜூலை 30 அன்று கைது செய்தனர்.
மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். "ஐஏஎஃப் வீரர் தனது ஜூப்லி ஹில்ஸ் சொத்தை விற்க முயன்றபோது ரியல் எஸ்டேட் முகவர் மூலம் சில மாதங்களுக்கு முன்பு பஷீத்-ஐ கண்டார்" என்று சைபராபாத் காவலர் ஒருவர் தெரிவித்தார்.
ரெட்டி தனது புகாரில், பஷீத் தன்னை ஒரு பணக்காரனாகக் காட்டிக் கொண்டதாகவும், சொத்தை வாங்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். புகார்தாரர் யாப்ராலில் உள்ள மற்றொரு சொத்தை விற்கத் தயாராக இருப்பதை அறிந்த பஷீத், இரண்டையும் 12.5 கோடிக்கு வாங்குவதாக அவரை நம்பவைத்தார். "இந்த பரிவர்த்தனையின் சாக்குப்போக்கின் கீழ், இண்டஸ்இண்ட் வங்கியின் ஷம்ஷாபாத் கிளையில் கணக்கு தொடங்குமாறு புகார்தாரரை பஷீத் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, விற்பனைப் பத்திரம் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பஷீத் புகார்தாரரிடம் தனது வணிக கூட்டாளி ஒருவர் தனது கணக்கில் 40 கோடி வரவு வைப்பதாகத் தெரிவித்து, அதை அனுமதிக்குமாறு வங்கிக் கேட்டுக் கொண்டார்.
Market today | உலகளாவிய பங்குகளில் சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி! சர்ரென சரிந்த ரூ.10 லட்சம் கோடி!
அவர் புகார்தாரரிடம் ரூ.12.5 கோடியை இரண்டு சொத்துக்களுக்கு செலுத்துமாறும், மீதமுள்ள தொகையை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறும் கேட்டார். புகார்தாரரை விசாரிக்க ராமசாமியை அவர் தொடர்பு கொண்டார்," என்று போலீசார் தெரிவித்துன்னர்.
முன்னாள் படைவீரர், அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 40 கோடி ரூபாய் மோசடியான பணப் பரிவர்த்தனையின் மூலம் கிடைத்த பணம் என்றும் வங்கியின் கணக்கு முடக்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக முன்னாள் ராணுவ வீரர் கூறியள்ளார். .
மோசடியின் காரணமாக புகார் அளித்தவரின் பணம் மற்றும் சொத்துக்கள் இரண்டும் இப்போது அணுக முடியாத நிலையில் உள்ளன. நாங்கள் குற்றச்சாட்டுகளை சரிபார்த்து வருகிறோம், அதன்படி விரைவில் நடவடிக்கை எடுப்போம்" என்று சைபராபாத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் பிரத்தியேகமான கிரெடிட் கார்டுகள் யாவை?