சென்னை போரூர் அடுத்த  ஐய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் வசந்த குமார் (21) . இவரது மனைவி வினிதா . வசந்த குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது . இதன்காரணமாக அடிக்கடி கைது செய்யப்பட்டிருக்கிறார் .

சில மாதங்களுக்கு முன்னதாக போரூர் ஏரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் . இது சம்பந்தமான வழக்கில் வசந்த குமார் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் .இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது . அவரது மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .  

இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சுடுகாட்டில் முட்புதர்கள் இடையே வசந்த குமார் கழுத்தறுத்து  கொலை செய்யப்பட்டு கிடந்தார் . அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வசந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மோப்ப நாய் ‘டைசன்’ கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மதுபோதையில் நண்பர்கள் சேர்ந்து கழுத்தை அறுத்து கொன்றனரா அல்லது போரூர் ஏரியில் நடந்த கொலை சம்பவத்தில் பழிக்கு பழியாக நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .