பழிக்குப் பழி? பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை தெரு அம்மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜா (29). இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

Rowdy murder in pondicherry

வில்லியனூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை தெரு அம்மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜா (29). இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவரது மனைவி அம்சா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டுச் சென்றார். கோபாலன்கடை மெயின்ரோடு அருகே வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்கூட்டரை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. 

Rowdy murder in pondicherry

இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு வெட்டு விழுந்ததை அடுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ராஜா இறந்து விட்டதை உறுதி செய்த பிறகே அந்த கும்பல் சாவகாசமாக அங்கிருந்து கிளப்பியது. இந்த கொடூர சம்பவத்தை பார்த்த நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Rowdy murder in pondicherry

இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்ததனர். இதனிடையே, சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த புதுமாப்பிள்ளை சதீஷ் என்கிற மணிகண்டன் கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி ஆவார். இதன் காரணமாக இந்த கொலை அரங்கேறியதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios