Asianet News TamilAsianet News Tamil

சம்பளம் வாங்கி ஆசை ஆசையாய் வீடு திரும்பிய இளம்பெண்.. தலைசிதறி உயிரிழந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வி(22). இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். 

road accident...young woman killed in kanchipuram  tvk
Author
First Published Nov 2, 2023, 1:39 PM IST | Last Updated Nov 2, 2023, 1:39 PM IST

லாரி சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண் தலைசிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வி(22). இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று  பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

road accident...young woman killed in kanchipuram  tvk

அப்போது  பெரியார் நகர் கூட்டு சாலை அருகே உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி வெற்றிச்செல்வி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி  சாலையில் விழுந்த வெற்றிச்செல்வி  லாரி சக்கரத்தில் சிக்கி  இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். இதில், தலையின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

road accident...young woman killed in kanchipuram  tvk

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற ஓட்டுநரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விபத்தில் உயிரிழந்த வெற்றிச்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததே விபத்து ஏற்படக் காரணம் என தெரிய வந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios