திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் இடத் தகராறு காரணமாக தனபால் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

retired military man gun shot against 2 persons in dindigul

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் தனபால் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர்  விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். தனபால் விற்பனை செய்த 5 ஏக்கர் நிலம் அளவில் சற்று குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக சித்திரைவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ராஜாகண்ணு என்ற இருவரும் தனபாலிடம் குறைவாக உள்ள இடத்திற்கு பணத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தனபால் தான் வைத்திருந்த பரலி துப்பாக்கியால் முதலில் கருப்பையாவை வயிறு மற்றும் தொடை பகுதியில் சுட்டுள்ளார்.

ஓமலூர் அருகே கடத்தப்பட்ட 127 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்; காவலர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

கருப்பையாவை காப்பாற்ற முயன்ற ராஜா கண்ணு விற்கும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் தனபால் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்துள்ள துப்பாக்கிக்கு உரிய அனுமதி உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios