தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கிறது புளியரை. தமிழக-கேரள எல்லை பகுதியான இங்கு வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக கேரள மாநிலத்திற்கு M - SAND கடத்தப்படுவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனியார் செய்தி நிறுவனமான புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் நிருபர் சம்பவ இடத்திற்கு மற்றொரு செய்தியாளருடன் சென்றுள்ளார்.

image

அப்போது புளியரை சோதனை சாவடியில் நின்ற நபர் ஒருவர் இருவரையும் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதைத்தட்டி கேட்ட இருவர் மீது அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார். இத்தகராறு நடக்கும் போது சம்பவ இடத்தில் இருக்கும் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் நின்று கொண்டிருந்தனர். காவலர்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதையடுத்து புளியரை சோதனைச்சாவடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் தான் விருதுநகரில் செய்தியாளர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சம்பவம் வடமாநிலங்களை போல தமிழகத்திலும் செய்தியாளர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறதா? என்கிற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது.