பிரபலமான தனியார் பள்ளியில் எல்கேஜி சீட்டுக்காக சமூக ஆர்வலர் என்ற பெயரில் நடமாடும் நபரை பார்க்கப் பேணா பெண்ணை வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமை செய்ததோடு, 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தும், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய சம்பவம் பெங்களுருவில் அரங்கேறியுள்ளது. அவனிடம் இருந்து தப்பி வந்த பெண்  அளித்த புகாரில் அந்த கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டம். இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில்  படிக்கவைக்கலாம்.

இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் "எல்கேஜி" முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாக  தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.  அனைத்து பள்ளிகளிலும் 25 சதவிகிதம் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். 

பிரேமா பெண் தனது மகளை பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக அவர் ராமநகரத்தில் வசிக்கும் சமூக ஆர்வாராக சுற்றித் திரியும் ஆனந்த் என்பவரை அணுகியுள்ளார்.இவர், கன்னட ஸ்ரீ சங்கேதனா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். 6 வயது மகளுக்கு பிரபல பள்ளியில் சீட் வாங்கித்தரவேண்டும் என்று பிரேமா கேட்டுள்ளார். முதல் நாள் நாளை வீட்டுக்கு வாங்க பேசலாம் என சொல்லியுள்ளார். மறுநாள் அந்த பெண்ணிடம் தனது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று வரவழைத்தான். அதற்கும் அந்தப்பெண் சம்மதித்தார். 

 மகளின் படிப்பிற்காக பாத்திரம் துலக்குவது, வீடு கூட்டுவது, சமையல் செய்வது என அனைத்து வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்தா. ஆனாலும் விடாத அந்த கொடூரன், அந்தப் பெண்ணை பலவந்தமாக உல்லாசம் அனுபவித்து விட்டு வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டான். 

அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியே சொன்னால் அந்த பெண்ணையும் குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியே 5 நாட்களாக பலாத்காரம் செய்துள்ளான்.   அவனின் காம விளையாட்டால் உடலளவில் வேதனையை அனுபவித்த அந்த பெண் அவனிடம் இருந்து தப்பி வந்தார். தனது வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கொதித்து போன குடும்ப உறவினர்கள் ஆனந்த் பெயரில் போலீசில் புகார் அளித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். புகாரின் அடிப்படையில் ஆனந்தை கைது  செய்து சிறையில் அடைத்தனர்.