சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது தீவட்டிப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண் நண்பர் காரில் அழைத்து வந்து, அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்த, அந்தப் பெண்ணின் உறவினர்கள், இளைஞரான ஆண் நண்பரின், காரை மடக்கிப் பிடித்து வழிமறித்துள்ளனர். பின்னர், அந்த இளைஞருடன், இளம்பெண்ணின் உறவினர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் சிறித நேரத்தில், அந்த இளைஞர், தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, அதே காரில் மீண்டும் இளம் பெண்ணின் வீட்டருகே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை சுற்றி வளைத்த, பெண்ணின் உறவினர்கள், அதிலிருந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதோடு நில்லாமல், காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பம், அங்கிருந்த சிசிடிவிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.