இந்திய அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த ஸ்ரீசாந்த் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் சரியாக போகாத நிலையில் தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அங்கும் ஸ்ரீசாந்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
   
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீசாந்த் தனக்கும் தனது மனைவி புவனேஷ்வரிக்கும் இடையிலான காதலை பற்றி உருகினார். அதாவது திருமணத்திற்கு முன்னதாக தானும் –தனது மனைவியும் ஏழு வருடங்கள் காதலித்ததாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார். ஏழு வருட காதல் திருமணத்தில் முடிந்துமிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் ஸ்ரீசாந்த் இப்படி கூறியதும் அவரது பழைய காதலி நிகிஷா பட்டேல் கொதித்து எழுந்துவிட்டார்.


   
ஏனென்றால் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்த் புவனேஷ்வரியை திருமணம் செய்து கொண்டார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது 2006ம் ஆண்டு முதல் புவனேஷ்வரியை ஸ்ரீசாந்த் காதலித்து இருக்க வேண்டும். ஆனால் நடிகை நிகிஷா பட்டேலுடன் கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஸ்ரீசாந்த் டேட்டிங் சென்று கொண்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டியே தற்போது நிகிஷா ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.
  
 2006ம் ஆண்டு முதல் புவனேஷ்வரியை ஸ்ரீசாந்த் காதலித்துக் கொண்டிருந்தால் தன்னுடன் ஏன் ஒரு வருடம் லிவிங் டுகெதர் ரிலேசன் ஷிப்பில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அப்படி என்றால் புவனேஷ்வரியையும் காதலித்துக் கொண்டு என்னுடனும் ஸ்ரீசாந்த் உறவில் இருந்தாரா என்றும் நிகிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.