ஒரு தலைக்காதலால் செவிலியர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சித்தன்னபேட்டையை சேர்ந்த சின்னாரி என்ற இளம் பெண், விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் தொடர்ந்து செவிலியர் சின்னாரிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகபூசணம், மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் சின்னாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்  திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. 

இதில், உடல் கருகிய நிலையில் செவிலியர் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், இளைஞரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செவிலியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.