சண்முகவேல் என்ற  முதியவர் தனுது வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்த போது திடிரென மறைந்த வந்து கொள்ளையர்கள் பட்டாக்கத்தியுடன் முதியவரின் கழுத்தை துணியிலே  இறுக்கிப் பிடித்து இன்னொரு கொள்ளையனையும் அப்போது அந்த முதியவர் மற்றும் அவரது மனைவி சாமர்த்தியமாக தாக்கியுள்ளனர். கொள்ளையர்கள் பிளான் போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்டது எப்படி ஏன்? என்ற பரபரப்பு பின்னணி தெரியவந்துள்ளது.

நெல்லையில் மாவட்டம் கல்யாணிபுரம் இடத்தில் சண்முகவேல் என்ற முதியவர் தனுது வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்த போது திடிரென மறைந்த வந்து கொள்ளையர்கள் பட்டாக்கத்தியுடன்  முதியவரின் கழுத்தை துணியிலே  இறுக்கிப் பிடித்து இன்னொரு கொள்ளையனை அப்போது அந்த முதியவர் சாமர்த்தியமாக நழுவி அவர்களை தாக்க முயற்சித்தார் கொள்ளையர்களும் முதியவர்களும் மாறி மாறி தாக்கி கொள்ளையர்களை விரட்டியடித்தனர் தறபோது,  சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதேபோல் கொள்ளையர்களை எதிர்த்து போராடிய முதியவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும், இந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் யார் அந்த கொள்ளையர்கள்? என்று மேற்கண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது அதாவது பிரபல வார இதழான விகடன் இதழின் மற்றொரு சிறப்பு இதழான பசுமை விகடனில் "இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்!" என்ற தலைப்பிட்டு அட்டைப்படத்தோடு சண்முகவேலு மற்றும் அவரது மனைவியின் படத்தோடு  அவர்கள் கொடுத்துள்ள அந்த பேட்டியில் எலுமிச்சையை உற்பத்தி, மகசூல் மற்றும் வருமானம் குறித்து தெளிவாக கூறியிருக்கிறார். 

அதில்.... ஒரு வருஷத்துக்கு 32,500 கிலோவுக்குக் குறையாமல் எலுமிச்சை கிடைக்கிது.. ஒரு கிலோ எலுமிச்சைக்கு 20 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். சீசன் சமயங்கள்ல நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலகூட விற்பனையாகும். நான் அதிகபட்சமா கிலோ 130 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். போன வருஷம், 32,500 கிலோ எலுமிச்சையை விற்பனை செய்ததில், 11,37,500 ரூபாய் வருமானம் கிடைச்சது.

எல்லாச் செலவும் சேர்த்து 3,50,000 ரூபாய் போக, 7,87,500 ரூபாய் லாபமாகக் கிடைத்தது எனவும் தொடர்புக்கு சண்முகவேலு, செல்போன்: 94862 04359. போன் நம்பர் விலாசத்தோடு வெளியான இந்த பத்திரிகையில் அந்த தம்பதிகள் வருடத்திற்கு 8 லட்சம் வரை சம்பாதிப்பாய் தெரிந்துகொண்ட திருடர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பிளான் போட்டு களத்தில் இறங்கினர் ஆனால், அவர்களது திட்டம் வீரத் தம்பதியால் முறியடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.