10 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தொழிலதிபர் ராதாகிருஷ்ணனின் மனைவி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் மீது கடந்த வாரம் கல்லூரி மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், ராதாகிருஷ்ணன் 100-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் அவரது புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 இந்நிலையில் ராதாகிருஷ்ணன் பல பெண்களிடம் இதே போன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளிவந்த நிலையில் அடுத்ததாக நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்து தன்னையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். 

அந்த மனுவில் அவர்,  எனக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  எனக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  என் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.  மதுக்கடையில் வைத்து எனது கணவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசுவார். எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சினையை அவரே  ஏற்படுத்தி  பிறகு சமாதான படுத்தி வைப்பார். பின்னர் கணவர் இல்லாத சமயத்தில் வந்து என்னை  மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.அதை வைத்தே என்னை மிரட்டி மிரட்டி பலமுறை பாலியல்  பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ராதாகிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று அவரது மனைவி பிருந்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாலியல் குற்றவாளி ராதாகிருஷ்னனால் சீரழிக்கப்பட்ட பெண்கள் பட்டியல் மேலும் தொடர வாய்ப்புள்ளது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்த போது மிரட்டி அனுப்பி உள்ளனர். எனவே, வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வர போலீசார் முயன்று வருவதா குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.