தாய், சகோதரி, தம்பி மனைவி ஆகியோரை போதையில் பலாத்காரம் செய்த இளைஞரை குடும்பமே சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (24) என்ற இளைஞர் ஒருவர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.  இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

போலீசார் விசாரணையில் குடும்பத்தினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். அதில், மதுபோதைக்கு அடிமையான சுஷில் ஜாதவ். எப்போதும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார். அப்படி வரும் சுஷில், தாய், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோரை பலாத்காரம் செய்துள்ளார். இது பல நாட்கள் நீடித்து வந்ததால் ஆத்திரம் அடைந்து, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

நவம்பர் 11-ம் தேதி குடிபோதையில் இருந்த ஜாதவ் சகோதரனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றபோது அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உடலை மலைப்பகுதியில் போட்டுவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் குடும்பத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.