சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்காலிக ரயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் நேற்றிரவு வீடு திரும்புவதற்காக பல்லாவரத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார். ஆனால், அந்த பெண் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த பெண் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில்  தாம்பரம் பராமரிப்பு நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, ரயிலை சுத்தம் செய்ய வந்த தற்காலிக ஊழியர்களான சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, உடனே அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் போச்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புறநகர் ரயிலில் 40 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.