மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

கோவை செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்தவர் திலீப்குமார் (28). நகைபட்டறை வேலை பார்த்து வருகிறார். அந்த பகுதியில் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை சரியான பயன்படுத்திக்கொண்ட திலீப்குமார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அதை தனது செல்போனிலும் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். இதனிடையே, அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தப்பிக்க முயற்சி செய்த திலீப்குமாரை மடக்கிப்பிடித்தனர். பின்னர், தர்மஅடி கொடுத்து அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திலீப்குமாரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.