உத்தரபிரதேசத்தில் தங்களின் மகன்களை விட நன்றாக படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவியை உறவினர்களும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை நன்றாக படித்து வந்துள்ளார். இது அவரது உறவினர்களுக்கு குடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிகளை அவர் பலமுறை கற்பழித்து இருக்கிறார். அந்த கும்பல் மாணவியை வீடியோ எடுத்தும் மிரட்டி வந்துள்ளனர். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மாணவி பற்றிய வீடியோ வெளியானதை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சிறுமி மற்றும் அவரை பலாத்காரம் செய்த 4 மாணவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டுக் குடும்பமாக உள்ளனர். மாணவி, நன்கு படிக்கக் கூடியவர். அதே நேரத்தில், இந்த மாணவர்கள், சரியாக படிக்கவில்லை. அதனால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். தங்களைவிட நன்கு படிப்பதால், அந்த மாணவியை பழிவாங்க, இந்த மாணவர்கள் திட்டமிட்டனர். உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்துள்ளனர். 

இதுபோல், பலமுறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும், அதை, 'வீடியோ' எடுத்துள்ளனர்.'வாட்ஸ் ஆப்' இதை பள்ளி ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளான். கண்டிக்க வேண்டிய அவன், மாணவர்களுடன் சேர்ந்து, அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். சமீபத்தில், இந்த மாணவர்களில் ஒருவன், பலாத்கார வீடியோவை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள குழுவுக்கு அனுப்பியுள்ளான். அதன்பிறகே, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அந்த மாணவிக்கும், தான் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவில்லை.

 

மைதானத்தில் மயங்கி விட்டதாகவும், அதனால், ஆசிரியர் அறையில் படுக்க வைத்ததாகவும், அந்த மாணவர்கள் கூறி, சமாளித்து வந்துள்ளனர். புகாரின் அடிப்படையில், இந்த 4 மாணவர்கள் மற்றும் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.