Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி நிலத்திற்காக கொலை..! 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நிலம் அபகரிப்பு தொடர்பாக நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை கொலை செய்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுர மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

Ramanathapuram Court sentenced 8 people to life imprisonment in the case of murder of government official
Author
First Published Dec 9, 2022, 8:41 AM IST

நிலத்திற்காக அரசு அதிகாரி கொலை

ராமநாதபுரம் மாவட்டம் மாடகொட்டான் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஏராளமான நிலம் இருந்துள்ளது. இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் தன்னிடம் வேலை செய்யும் பகவதி என்ற பெண்ணை தமிழரசனோடு பழக விட்டு அவரிடம் இருந்த நிலத்தின் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் தமிழரசுக்கு சொந்தமான இடங்களை இரண்டு பிரிவுகளாக கோபால் மற்றும் பகவதி பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அளிந்த தமிழரசன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்,மேலும் இது தொடர்பாக தகராறு நடந்து வந்த நிலையில் தமிழரசனை கொலை செய்ய திட்டமிட்டு அவருடைய உறவினரான மாதவன் மகேஷ், கூலிப்படையை சேர்ந்த செல்வம், சீனிவாசன், பால யோகேஷ், விஜயகுமார், முத்துராஜ், கோபி உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பட்டனங்கத்தான் இசிஆர் சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழரசனை மடக்கி பிடித்து பட்டப் பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். 

ஓடிப்போன பெண் கொலை.! 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞர்.! திடீரென உயிருடன் வந்த பெண் - போலீஸ் அதிர்ச்சி

Ramanathapuram Court sentenced 8 people to life imprisonment in the case of murder of government official

8 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணை ஆனது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  முதல் குற்றவாளியான மாதவன் மகேஷ், இரண்டாம் குற்றவாளியான செல்வம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும், மற்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை.. அண்ணன் மகன் அதிரடி கைது..!

Follow Us:
Download App:
  • android
  • ios