பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சவபணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலை தனியார் மருத்துவமைக்கு மாற்றி மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று கோர் அனுமதி அளித்துள்ளது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண் அடைந்த ராஜகோபால் சிறைக்கே செல்லாமல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கே சிறைக்கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 71 வயதாகும் ராஜகோபாலுக்கு  உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 


இந்நிலையில் அவரது மகன் சரவணன், ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்பதால் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதிகள் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.