Asianet News TamilAsianet News Tamil

கொலையை செய்துவிட்டு அவகாசமா..? சரவண பவன் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Rajagopal Supreme Court orders action
Author
Tamil Nadu, First Published Jul 9, 2019, 11:22 AM IST

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Rajagopal Supreme Court orders action

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சரண் அடைய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ராஜகோபல் தவிர 9 பேர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.

ராஜகோபால் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைய விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரால் சிறையில் இருக்க முடியாதா? ஒரு நாள் கூட வெளியில் இருக்க அவகாசம் கொடுக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறி அவர் சரணடையவில்லை என்றால் காவல்துறை மூலம் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

 Rajagopal Supreme Court orders action

சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தன்னுடைய ஓட்டலில் பணியாற்றிய ஊழியரின் மகளான ஜீவஜோதியை மனைவியாக அடைய நினைத்தார். இதற்காக ஜிவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது.இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.Rajagopal Supreme Court orders action

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி நேற்று அவர் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்க வேண்டும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. இதனால் அவர் நேற்று சரண் அடையவில்லை
 

Follow Us:
Download App:
  • android
  • ios