பெண் மீது மோகம் கொண்டு கடைசி நாட்களில் வேதனையோடு மறைந்தாலும் சரவண பவன் ராஜகோபால் அண்ணாச்சியின் தொழில்
தாகம் அசாத்தியமானது.

 

1947ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னையாடி என்னும் குக்கிராமத்தில் மிகவும் வறுமையான விவசாய கூலிக்கு மகனாகப்
பிறந்தவர் ராஜகோபால். இளம் வயதிலேயே வியாபாரத்தில் சாதிக்க வேண்டும் என்கிற அவரை உந்தித்தள்ள வெங்காயத்தை வாங்கி
வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.1973ம் ஆண்டு சென்னை அவர்ந்த ராஜகோபால் ஐந்து ஆண்டுகளாக பார்க்காத கூலி வேலையில்லை.
ஐந்தாண்டுகளாக ரோட்டோரங்களில் படுத்துறங்கி, ஓட்டை சைக்கிளில் அலைந்து சிறு சிறு வியாபரங்கள் செய்து அன்றாடப்பிழைப்புகே
அலைக்கழிந்தார்.

 

ஐந்து வருட அபார உழைப்பால் சென்னை கே.கே.நகரில் 1973ல் சிறிய அளவில் ஒரு பெட்டிக்கடையை ஆரம்பித்தார். வியாபாரம்
கைகொடுக்க 1981ம் ஆண்டு முதல் ஹோட்டலை சிறிய அளவில் கே.கே.நகரில் நிறுவினார். 38 ஆண்டுகளுக்கு முன் அவர் தொடங்கிய
அந்த ஹோட்டல் பல்கிப்பெருகி இப்போது உலகம் முழுவதும் வியாபித்து 2300 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 

உலகின் முதல் செயின் உணவகத்தை நடத்திய முதல் தமிழனாக முயற்சி செய்தார் ராஜகோபால். 1990ல்  சென்னையில் அடுத்தடுத்து சரவண பவன் கிளைகளை ஆரம்பித்தார். அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. 1992 சிங்கப்பூர் சென்ற ராஜகோபால் மெக் டோனால்ட் துரித உணவகத்தை பார்த்து அதனை மாடலாக கொண்டு சரவணபவன் நிறுவனத்தை உலகம் முழுவதும் தொடங்க முடிவெடுத்தார்.  அதன் பிறகு கிளைகளைன் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பரப்பினார். 

2000 ம் ஆண்டு இந்தியா தாண்டி தங்களது முதல் கிளையை துபாயில் பரப்பியது சரவணபவன்.  அதுத்து பாரிஸ்,சிங்கப்பூர் , மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ப்ரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, பஹ்ரைன், அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, கென்யா, நெதர்லான்ந்து, ஸ்வீடன் என உலகம் முழுவதும் 24 நாடுகளில் தற்போது 2300 கிளைகளை வைத்துள்ளது சரவணபவன். 

2017ம் ஆண்டு கணக்குப்படி சரவணபவன் ஈட்டும் ஆண்டு வருமானம் 300 கோடிக்கும் மேல். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் ஒன் ஹோட்டல் அதிபராக சர்க்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜகோபால் அண்ணாச்சியின் அயராத உழைப்பும், புகழும் பெண் மீது கொண்ட மோகத்தால் கடைசி காலத்தில் கொலைக்குற்றவாளியாக தண்டனை அனுபவிக்க சிறை சென்று அந்தக் கவலையில் இருதய அடைப்பால் வேதனையோடு மரணத்தை தழுவி இருக்கிறார்.