தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட்டான புஜாராவை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தட்டிக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (26ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார். கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 

இந்த போட்டியில் புஜாரா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மிகுந்த ஏமாற்றமளித்தார். புஜாரா - ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். இந்திய பேட்டிங் ஆர்டரின் முக்கியமான வீரர்களான இவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் அண்மைக்காலமாக திணறிவருகின்றனர். ஆனாலும் அவர்களது திறமை மற்றும் அவர்கள் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில் தான், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் உட்காரவைக்கப்பட்டுவிட்டு, இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதுவும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் டக் அவுட்டான புஜாராவை ராகுல் டிராவிட் தோள்களில் தட்டிக்கொடுத்து தேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கின் போது எழுந்த ராகுல் டிராவிட், புஜாராவின் தோள்களில், பரவாயில்லை.. விடு பார்த்துக்கலாம் என்கிற ரீதியில் தட்டிக்கொடுத்தார். ராகுல் டிராவிட்டின் செயலால் நெகிழ்ந்துபோன புஜாரா சிரித்தார்.

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Scroll to load tweet…