சட்டக்கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி, பாலியல் உறவு கொண்ட காவல்துறை உதவி ஐ.ஜி மீது, பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உதவி ஐ.ஜியாக இருப்பவர் ரந்தீர் சிங் உப்பல். அவருக்கும், அங்குள்ள சட்டக்கல்லூரியில் படித்துவரும் திருமணமான மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குற்றவழக்குகள் தொடர்பான நிகழ்ச்சிக்காக சட்டக்கல்லூரிக்கு வந்த உதவி ஆய்வாளர் ரந்தீர் சிங் உப்பல், திருமணமான சட்டக்கல்லூரி மாணவியை சந்தித்து பேசியுள்ளார். 

இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், பல இடங்களுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவியை தனது குடியிருப்புக்கு வரவழைத்த உதவி ஐ.ஜி, அவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. நண்பர் என்ற முறையில், ஐ.ஜி  மீது புகார் அளிக்காத மாணவி, அதன் பிறகும் ரந்தீர் சிங்குடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். 

இதனால் ருசி கண்ட பூனையான ரந்தீர் சிங், வெவ்வேறு பொய் காரணங்களைக் கூறி, மாணவியை ஓட்டல் அறை, நண்பர்களின் வீடு என பல இடங்களுக்கு வரவழைத்து, பாலியல் உறவு கொண்டுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத சட்டக்கல்லூரி மாணவி, உதவி ஐ.ஜி ரந்தீர் சிங் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து, ரந்தீர் சிங் உப்பல் மீது பாலியல் பலாத்காரம், ஒருவரின் சம்மதம் இன்றி பாலியல் உறவு கொள்ளுதல், பெண்ணை தாக்குதல் அல்லது கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கூறியுள்ள காவல்துறை இணை ஆணையர் லக்பீர் சிங், பெண்ணின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், உதவி ஐ.ஜி  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.