ஓடி ஒளிந்துகொண்ட பேராசிரியர்..!  

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவியிடம் பேராசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதால் அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் ஸ்காட் என்பவர் வரலாற்றுத்துறையில் ஹாட் HOD ஆக உள்ளார். அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா விடமும் புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.