னில் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் ராஜா. அவரது பேச்சுக்கு மயங்காத காவ்யாவோ பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த நிலையில் காவ்யாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால் மனம் உடைந்து விரக்தி நிலைக்கு தள்ளப்பட்ட ராஜா, தங்கி இருந்த அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி உறவினர்களின் தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர்.

அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரது மனைவியின் 3 செல்போன் எண்கள் என்று கருதி காவல்துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், காலையில் குழந்தை குட்டிகளுடன் 3 பேர், தாங்கள் தான் மனைவி என்று வந்து நின்றதால் காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

3 பேரும் கணவர் சிங்காரவேலன் சடலத்தை தங்களிடம் தான் தரவேண்டும் என்று கோரிக்கைவைத்து போராட்டத்தில் குதித்தனர். 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும் ஆதரவுக்கு வேறு யாரும் இல்லாததாலும் அவரது எதிர்காலம் கருதியும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், கணவரின் சடலத்தை பெற்றுச்செல்ல முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில் ராஜாவின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் தனது கணவரின் சடலத்தை ஏற்றி செல்ல, சிறிது தூரம் அவரது சடலத்துடன் பயணிக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்த தனலெட்சுமியும் அந்த வாகனத்தில் ஏறிச்சென்றார். 3 வது மனைவியாக முறைப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காவ்யாவோ, போலீசார் எச்சரித்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஒன்றை கட்டினாலே ஓராயிரம் பிரச்சனைகள் என்று வாழ்ந்து வருபவர்கள் மத்தியில், ஆசைக்கு ஒன்று, அசதிக்கு ஒன்று, வசதிக்கு ஒன்று என்று 3 பேருடன் முறையற்று வாழ்ந்த சிங்கார வேலனுக்கு ஏற்பட்ட பரிதாபம் தான் நிகழும்.