நைஜீரியாவில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நைஜீரியாவில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் ஒலுவாபாமிஸ் அயனோலா. பேஷன் டிசைனரான இவர் தனது சகோதரை சந்திக்க சென்றுள்ளார். இவரது சகோதரர் இடிமு நகரில் வசித்து வந்துள்ளார். ஆகவே அங்கு செல்வதற்காக கடந்த 26 ஆம் தேதி ஒலுவாபாமிஸ் அயனோலா, ஓசோடி நகரத்தில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அவர் இடிமு நகருக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒலுவாபாமிஸ் அயனோலா யாபா நகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவரது பிறப்புறுப்பு அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே உயிரிழந்த ஒலுவாபாமிஸ் அயனோலா பேருந்தில் ஏறிய பிறகு தனது தோழி பெலுமி என்பவரிடம் கடைசியாக பேசியுள்ளார் என்பது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒலுவாபாமிஸ் அயனோலா தான் பேருந்தில் பாதகாப்பாக இருப்பதை போல உணரவில்லை என்று கூறியதாகவும் பேருந்தில் இருக்கும் வீடியோக்களையும், பேருந்தில் இருந்தவாறே வாய்ஸ் மெசேஜ்களும் அனுப்பியதாகவும் அவரது தோழி கூறினார். மேலும் தொடர்ந்து பேருந்தில் இருந்த ஒலுவாபாமிசுக்கு பதில் மெசேஜ்கள் அனுப்பியதாகவும் கூறிய பெலுமி, ஒருகட்டத்திற்கு மேல் ஒலுவாபாமிசிடம் இருந்து எந்த செய்தியும் வராத காரணத்தால், அவருக்கு போன் செய்து தொடர்பு கொண்டதாகவும் ஆனால், அவர் போனை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை அடுத்து ஒலுவாபாமிஸ் அயனோலா கடைசியாக பயணம் செய்த பேருந்து ஓட்டுநரான 47 வயதான ஆண்ட்ரூ நைஸ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் தேடுதலை தீவிரப்படுத்தினர். தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூ நைஸை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆண்ட்ரூக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 22 வயதே ஆன ஒலுவாபாமிஸ் அயனோலா பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.