மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்த பெண் நோயாளியை மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் செவிலியர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . "குறையே குறையே என கோவிலுக்கு போனால் பூசாரிக்கு சாமி வந்து தலைமுடியைப் பிடித்து  ஜங்கு ஜங்குனு  ஆடுச்சாம். " என்ற பழமொழிக்கேற்ப அரியானா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  உடம்பு முடியவில்லை என்று மருத்துவமனைக்கு சென்ற பெண் மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம்செய்துள்ளகொடுமைதான் அது. 

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை  ஒன்று செயல்பட்டு வருகிறது அங்கே ,  சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிவரும் ஆண் செவிலியர் சம்பவத்தன்று அதிகாலை அந்தப் பெண்ணின் அறைக்கு சென்றுள்ளார் .  அப்போது அந்தப் பெண் அரை மயக்க நிலையில் இருந்ததாக தெரிகிறது. உடனே அந்த செவிலியர் அந்தப் பெண்ணின் ஆடைகளை கலைந்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .  அந்தப் பெண் மயக்கநிலையில் இருந்ததால் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரால் தடுக்கமுடியவில்லை .  மயக்கம் தெளிந்த நிலையில் ஆண் செவிலியரால்  தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் கணவர் இடத்தில் கூறினார் அந்த பெண் . அதில் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் நிர்வாகத்திடமும் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார். 

பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அந்த ஆண் செவிலியரை போலீசிடம் ஒப்படைத்தது,  இந்நிலையில் அந்த நபர் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,  ஆனால் நீதிமன்றம் அவருக்கு  ஜாமின் வழக்கியுள்ளது. ஆனாலும் விசாரணையிம் முடிவில்  அந்த நபர் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.