சாதி மாறி திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் கூலிப்படை மூலம் சென்னை காரப்பாக்கத்தில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முரளி(28) இவர் அருகில் உள்ள தேனீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் முரளியை சரமாறி வெட்டினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் முரளியை வெட்டியவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.  

விசாரணையில் :- கொலை செய்யப்பட்ட முரளி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும்  மேலாதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார். முரளியை வெட்டி ஆணவக் கொலை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பட்டப் பகலில் நடு ரோட்டில் முரளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடுமலை சங்கரை கொலை செய்ததுபோல் ஆணவக்கொலை சென்னையிலும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.