நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் தாகூரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். 

 வினய் ஷர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கோவிந்த் கடந்த சனிக்கிழமை நிராகரித்து விட்டார். . இந்தநிலையில், மற்றொரு மரண தண்டனை கைதி அக்சய் தாகூர்  கருணை மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அக்சய் தாகூரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார். 

மரண தண்டனை வழங்கப்பட்ட ஒரு கைதிக்கான கடைசி விருப்பம் ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவை அனுப்பி வேண்டுகோள் வைக்கலாம். ஆனால் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தால், மரணதண்டனையை அடுத்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு நடத்தலாம். ஆனால் நிர்பயா வழக்கில் வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் அக்‌ஷய் சிங் ஆகியோரின் மரண தண்டனை ஒன்றாக நடக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம்  கூறியுள்ளது,

 

இந்நிலையில், நான்காவது குற்றவாளியான பவன் குப்தா இன்னும் கருணை மனு கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. மற்ற மூன்றுபேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை சரியாக 15 நாட்கள் முடியும் வரை காத்திருந்து பவன் குப்தா கருணை மனு தாக்கல் செய்தால் குற்றவாளிகளை தூக்கிலிடுவது என்பது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் ஆகும் நிலை ஏற்படும். நிர்பயா ஆத்மா இவர்களை தூக்கிலடப்பட்டால் மட்டுமே சாந்தியடையும். இதைத்தான் அனைத்து மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

TBalamurukan