பெண் சித்தமருத்துவர் மூலம் நடைபெற்ற கருக்கலைப்பின் போது உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த மொட்டுவாவி எனும் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி வனிதாமணி இவருக்கு ஏற்கனவே  4 குழந்தைகள் உள்ள நிலையில் வனிதாமணி மீண்டும் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்த அவரது குடும்பத்தினர் குழந்தை வேண்டாமென முடிவு செய்து கருவைக் கலைக்க முயன்றுள்ளார்.

அதனையடுத்து, வடசித்தூர் எனும் ஊரில் உள்ள கிளினிக் வைத்துள்ள ஹோமியோபதி மருத்துவர் முத்துலட்சுமியை தேடி வந்துள்ளனர். அதனையடுத்து முத்துலட்சுமி தனது மகனோடு வந்து வனிதாமணிக்குக் கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். சில மணி நேரத்தில் வனிதாமணியின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. அவரை அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே வனிதாமணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அந்த சித்த மருத்துவர் முத்துலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் மாயமாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களைப் போலிஸார் தேடி வருகின்றனர்.