தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஊசி மருந்தை மாற்றி செலுத்தியதால், 9 மாத கர்ப்பிணி உயிரிழந்து விட்டதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது தான் அபிராமி கருத்தரித்ததாகக் கூறப்படுகிறது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தருமபுரியில் உள்ள ஸ்ரீ அன்னை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. சனிக்கிழமை இரவு அந்த மருத்துவமனைக்கு சென்ற அபிராமிக்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் செவிலியர் சிகிச்சை அளித்ததாகவும், ஊசி போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
 
தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது தான் அபிராமி கருத்தரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அபிராமி வழக்கமான பரிசோதனைக்காக ஸ்ரீ அன்னை என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சனிக்கிழமை இரவு அந்த மருத்துவமனைக்கு சென்ற அபிராமிக்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் நர்ஸ் சிகிச்சை அளித்ததாகவும், ஊசி போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

அப்போது, ஊசி போட்ட உடனே அபிராமிக்கு வலிப்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆக்ஜிசன் குறைவாக இருப்பதாக கூறி அப்பெண்ணை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, ஏற்கெனவே அபிராமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சமரம் செய்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின் மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும், கர்ப்பிணி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், தவறான சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணிப்பெண் மரணித்ததாகவும், இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தனியார் மருத்துவமனை பேரம் பேசியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் அந்த தனியார் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.