புதுச்சேரியில் நடந்த அதி பயங்கர கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிஜேபி தலைவர்  சோழன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாண்டிச்சேரியில்  டாப் 10 ரவுடி லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கும் சோழன் பேரை சொன்னாலே சுத்துப்பட்டு மொத்த வட்டாரமே அலறும், தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டை அசால்ட்டா ஸ்கெட்ச் போட்டு இம்ப்ளீமென்ட் செய்யக் கூடிய ஷார்ப்பான ரவுடி தான் சோழன்.

சரி விஷயத்துக்கு வருவோம், கடந்த வருஷம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப்பை பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மெயின் அக்யூஸ்ட் மற்றொரு காங்கிரஸ் பிரமுகரான சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் வாங்கிக்கொண்டு தனது மாமனார் வீட்டில் ஜாலியாக, பாதுகாப்பாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்திரசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்தக்காரர் வீட்டு  துக்க நிகழ்ச்சிக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி சுகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் மனைவியின் கண்முன்னே கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசித் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் ரவுடி சுகன் மற்றும் அவனது தோஸ்த்தான ரங்கராஜ், அப்துல் நசீர் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகள் காலாப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவருக்கு வந்த அசைன்மெண்ட் தான் இது, அவர் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்து  சந்திரசேகரை தூக்க சொன்னது என வாக்கு மூலம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சோழனை தற்போது தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஈடுபட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் டாப் 10 ரவுடிகள் லிஸ்டில் முக்கிய இடத்தில் சோழன் பிஜேபியின் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.